Page Loader
ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
இன்றுவரை திருமண சமத்துவத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது

ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது

எழுதியவர் Sindhuja SM
Apr 26, 2023
07:11 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இன்றுவரை திருமண சமத்துவத்திற்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்களை பதிவு செய்த உச்ச நீதிமன்றம், இன்று மதியத்தில் இருந்து இதற்கு எதிராக வாதாடுபவர்களின் கருத்துக்களை கேட்க தொடங்கியது. முதற்கட்டமாக, இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசினார். கடந்த வாரம், ஒரே பாலின திருமணங்கள் குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பித்த போது, இது குறித்து விசாரிக்காமல் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரி இருந்தது.

details

இன்று விவதைக்கப்பட்ட முக்கிய பிரச்சனைகளின் ஹைலைட்டுகள்

"'எலைட்' வாதத்தை ஒதுக்கி வைத்துவிடலாம். அது பாரபட்சம் காட்டும் பேச்சு. அரசியலமைப்பு பிரச்சினையில் நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்குகிறோம் என்பதை அது தீர்மானிக்காது."-தலைமை நீதிபதி "திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே, இந்தச் சிக்கல்கள்(ஓய்வூதியம், திருமணத்தால் கிடைக்கும் சலுகைகள்) எழும்பி கொண்டிருக்கிறது. வேற்று பாலின தம்பதிகள் இந்த உரிமைகளை கோரி எப்படி நீதிமன்றங்களுக்கு வருகிறார்களோ, அதே போல, LGBTQ தம்பதிகளும் உரிமைகோரி நீதிமன்றங்களுக்கு வருவார்கள்."-வழக்கறிஞர் அருந்ததி கட்ஜூ "LGBTQ தம்பதிகளுக்கு எந்த ஒரு சிரமும் ஏற்படாமல் நீதிபதிகள் காக்க வேண்டும். அத்தகைய தம்பதிகளால் தனிப்பட்ட சட்டங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நாங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தான்."-வழக்கறிஞர் நண்டி