ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி
செய்தி முன்னோட்டம்
ஒரு தனிநபர் குழந்தையைத் தத்தெடுக்க இந்தியாவின் சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
ஒருவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பதை பொருட்படுத்தாமல், அவருக்கு இந்த உரிமையை இந்திய சட்டங்கள் வழங்குகின்றன.
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை ஒன்பதாவது நாளாக உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
விசாரணையின் போது, தலைமை நீதிபதி, "ஒரு தனி நபர் கூட ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம். தத்தெடுக்கும் நபர் ஒரே பாலின உறவில் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் இருந்தாலும் அவர் தத்தெடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.
details
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எதிர்ப்பு
"'சாதாரண குடும்பங்களில்' பிறக்கும் குழந்தைகளைத் தவிர பிற சூழ்நிலைகளும் இருக்கலாம் என்பதை சட்டம் அங்கீகரிக்கிறது. எதிர் பாலின திருமண தம்பதியரில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன நடக்கிறது." என்று மேலும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR), "பாலினம் மாறக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தாய்மை என்பது அப்படிபட்டது அல்ல" என்று இதற்கு எதிராக வாதிட்டுள்ளது.
மேலும், தத்தெடுப்பு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும் NCPCR கூறி இருக்கிறது.
"நமது சட்டங்கள் இயற்கையாகவே எதிர் பாலின நபர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்காக கட்டமைக்கப்பட்டது" என்று மேலும் NCPCR கூறியுள்ளது.