ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் ஒரே பாலின திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனுவதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
எனினும், இந்த பிரச்சனைகளுக்கு உரிய சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
LGBTQIA+ சமூகத்திற்கு எந்த மாதிரியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜ்வன்ஸ்க்
LQBTQIA+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது: நீதிபதிகள்
5 நீதிபதிகளுள் 3 நீதிபதிகள் LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், தலைமை நீதிபதி திருமணம் செய்து கொள்வதற்கும், குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் LGBTQIA+ தம்பதிகளுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.
5 நீதிபதிகளின் தீர்ப்புகளிலும் கருத்து வேறுபாடு இருந்தாலும், 5 நீதிபதிகளும் LGBTQIA+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்த உரிமைகளை தீர்மானிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
LGBTQIA+ தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியில் தீர்வு காண அமைச்சரவை செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு மே 3 அன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.