'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி
செய்தி முன்னோட்டம்
ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரே பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, இந்த பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்கியது.
அப்போது, தலைமை நீதிபதியும், நீதிபதி ஹிமா கோஹ்லியும் ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.
ஆனால், மற்ற 3 நீதிபதிகளும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினர்.
எக்ஜவெஞ்
'இதற்கு நாடாளுமன்றம் தான் தீர்வு காண வேண்டும்': தலைமை நீதிபதி
எனவே, பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஏற்ப இறுதி தீர்ப்பு ஒரே பாலின திருமணத்திற்கு எதிராக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து இந்திய தலைமை நீதிபதி இன்று பேசியிருக்கிறார்.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட மையம், வாஷிங்டன் DC மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சமூகம் (SDR) ஆகியவை இணைந்து நடத்திய 3வது ஒப்பீட்டு அரசியலமைப்பு சட்ட விவாதத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் இது குறித்து பேசினார்.
"அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மனசாட்சியின் வாக்கு. எனவே, ஒரே பாலின திருமண வழக்கில் நான் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை" என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், இனி இதற்கு நாடாளுமன்றம் தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.