Page Loader
#LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள்
LGBTQ சமூகத்தை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

#LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

பல காலமாய் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்ட LGBTQ சமூகம், தற்போது தான், தங்களுக்குரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனினும், இவர்களைப் பற்றி சில கட்டுக்கதைகள் நிலவி வருகிறது. இந்த காதலர் தினத்தில், அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை நீக்கி, அவர்களின் காதலை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் . ஓரினச்சேர்க்கை ஒரு நோய்: தன்பாலின சேர்க்கை என்பது, மனநல கோளாறோ, உடல் கோளாறோ அல்ல. மாறாக அதுவும் இயற்கை தான் என்று அறிவியல் சான்று உள்ளது. LGBTQ நபர்கள் பல நபர்களுடன் இணைவார்கள், விசுவாசமற்றவர்கள்: ஒரு குறிப்பிட்ட பாலினத்தை சேர்ந்தவர்கள், நம்பகத்தன்மையுடன் இருக்க மாட்டார்கள் எனக்கூறுவது தவறு. மாறாக, LGBTQவினர், தங்கள் காதலில் உண்மையுடனும் விஸ்வாசத்துடனும் இருப்பார்கள், நேர்பாலின மக்கள் ஏமாற்றுக்காரர்களாகவும் இருப்பார்கள்.

LGBTQ

LGBTQ உறவுகள் பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது

LGTBQவாக இருப்பது ஒரு வாழ்க்கை முறை தேர்வு: யாரும் இருபால் அல்லது ஓரினச்சேர்க்கையை தேர்வு செய்ய முடியாது. மாறாக, இயற்கையாகவே அவர்கள் எல்லோரையும் பாலியல் நோக்குநிலையுடன் பிறக்கிறார்கள். ஒரே பாலின விருப்பங்களைக் கொண்ட பெரும்பாலான மக்கள், தங்கள் உண்மையான உணர்வுகளை சிறு வயதிலேயே உணர்கிறார்கள். LGBTQ உரிமைகளை ஆதரிப்பவர்கள், நேர்பாலினம் அல்லாதவர்கள்: சக மனிதனின் பாலின தேவையை ஆதரிப்பதற்கு, அவர்களும் அதே போல பாலின சேர்க்கை கொண்டவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான புரிதல் மற்றும் அன்பினால் தரப்படும் ஆதரவு அது. ஒரே பாலின உறவுகளில், ஒன்று ஆண்பால், மற்றொன்று பெண்பால்: LGBTQ உறவுகள் அனைத்தும்,ஆண்பால்,பெண்பால் வேறுபாடுகளை தாண்டியது. அது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வைத்திருக்கும் அன்பை பற்றியது.