Page Loader
காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ்  வழிகள்
காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள்

காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

வரும் பிப்ரவரி 14-ம் தேதி, உலக காதலர் தினம். ரோஜா பூக்கள், சாக்லேட்கள் என்றும் எப்போதும் போல் இல்லாமல், ஏதேனும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்று மூளையை கசக்கி கொண்டிருப்பவர்களுக்கு, சில சர்ப்ரைஸ் ஐடியாக்கள் இதோ: 'First date'-ஐ மீண்டும் உருவாக்கவும்: நீங்கள் சென்ற முதல் date எப்போதும் ஸ்பெஷல்தான். அதை மறுபடியும் உருவாக்குவது ஒரு இனிய பரிசாக இருக்கும். அதே இடம், அதே ஆடை என முடிந்த வரை அதே நாளை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கலாம். இரவின் மடியில், நட்சத்திரங்களின் உலா: காதலர்கள் இருவரும் கை கோர்த்து, நட்சத்திரங்களை ரசிப்பது என்பது அனைவரின் கனவாகவே இருக்கும். அது போன்ற ஒரு ரம்மியமான இடத்தை தேர்வு செய்து, நிலவொளியில்,நட்சத்திர அழகை ரசிக்கலாம்.

காதலர் தினம்

பிரியமானவர்களுடன், பிரியப்பட்ட இடத்தில் பொழுதை களிக்கலாம்

இருவரும் இணைந்து செய்யக்கூடியவை: நீங்களும் உங்கள் துணையும் இணைந்து விளையாடக்கூடிய பொழுதுபோக்கு விளையாட்டுகளை பட்டியலிடுங்கள். மலையேறுதல், ஓவியம், சமையல், என பல நிகழ்ச்சிகள் ஜோடியாக ஈடுபடும் வகையில், ஒரு நாள் முழுக்க அவர்களுடன் உற்சாகமாக களிக்கலாம். வேடிக்கையாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திட்டமிடுங்கள்:உங்கள் துணைக்கு பிடிக்கும் வகையில், அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பாடுகளை அமைக்கலாம். இது போன்ற பல விளையாட்டுகள் சமுக வலைத்தளங்களில் மிக பிரபலம். அவற்றின் உதவியுடன், நீங்கள் தீர்மானிக்கலாம். நகரத்தின் பரபரப்பில் இருந்து விலகி செல்லுங்கள்: எப்போதும் நகர பரபரப்புக்கு இடையே நகரும் உங்கள் காதல் பயணத்தில் இருந்து சற்று விலகி, அமைதியான இடத்தை தேர்வு செய்து, உங்கள் நாளை கழிக்கலாம்.