கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ!
நீங்கள் செய்யும் வேலையே, உங்கள் கற்பனை சக்திக்கு தீனி போடும் வகையில் இருந்தால் இரட்டை சந்தோஷம் தானே! அப்படி உங்கள் படைப்பு திறனுக்கு தீனி போடும் வகையில் இருக்கும் சில வித்தியாசமான தொழில்கள் இதோ: உணவு அலங்கரிப்பாளர்கள் (Food stylists): எந்த ஒரு உணவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தால், அது சாப்பிடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். உங்களுக்கு உணவில் ஆர்வம் இருந்தால், இந்தத் துறையில் நுழைய விரும்பினால், சமையல் கலையில் ஒரு படிப்பை மேற்கொள்ளுங்கள். திருமண நடன இயக்குனர்: தற்போது திருமண நிகழ்வுகளில் நடனம் ஆடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கென பிரேத்யேகமாக நடன இயக்குனர்களை அணுகவும் தொடங்கி விட்டனர். உங்களுக்கு நடனம் பிடிக்கும் என்றால், நீங்கள் இந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.
மாடி தோட்டங்கள் அமைக்க உதவும் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்
ஃபோலே கலைஞர் (Foley artist): திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது விளம்பரங்களில் வரும்- காலடி சத்தம், மழை துளி சத்தம், மெல்லிய பூங்காற்றின் ஓசை போன்ற பின்னணி ஒலிகள் ஃபோலே கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. இந்தத் துறையில் நுழைவது எளிதல்ல; அங்கீகரிக்கப்பட்ட ஃபோலே கலைஞரின் கீழ் பணியாற்றுவதே முதல் படி. இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் (landscape architects): மாடி தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவற்றை வடிவமைப்பவர்கள் தான் இந்த நிபுணர்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிட கலைகள் தற்போது பின்பற்றபடுகிறது. அது மாதிரி கட்டிடங்களில், இயற்கை வளத்தோடு, கண்களுக்கு குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் கட்டுவதற்கு, இந்த நிபுணர்கள் உதவி செய்வார்கள். இந்தத் துறையில் நுழைய, நீங்கள் இயற்கைக் கட்டிடக்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.