விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்று புது வரலாறு படைத்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியா ஓபன் 2023 இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோவை 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பேட்மிண்டன் ஜோடி பட்டத்தை வென்றது.

சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற சில மைதானங்களில் விளையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

2021இல் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து, அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டாலும், அப்போது குறிப்பாக டெஸ்ட் கேப்டன்சிக்கு கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி

கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது, சர்வதேச விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ஒருவர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா?

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், வியாழக்கிழமை (ஜூன்15), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஆசிய கோப்பை ஹைபிரிட் முறைக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ளது.

ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் வியாழன் அன்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி குரூப் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கள் குழுவில் முதலிடம் பிடித்தது.

AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்

ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் (ஜூன் 16) முடிவில் வங்கதேசம் 616 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜூலையில் வங்கதேசத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் பிரிவுத் தலைவர் ஷஃபியுல் ஆலம் சௌத்ரி நடேல் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம்

ஜூலை 12ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

16 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன்16) இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ளது.

ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை

வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார்.

மனைவிக்காக கடலில் குதித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறவில்லை.

புறக்கணிப்பு சர்ச்சையை கிளப்பிய அம்பதி ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் விளக்கம்

2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அம்பதி ராயுடுவின் சமீபத்திய கருத்துகளுக்கு முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்துள்ளார்.

தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்

கடந்த வாரம் அமெரிக்காவின் மியாமியில் நடந்த தேசிய கூடைப்பந்து லீக் இறுதிப் போட்டியின்போது, அயர்லாந்தை சேர்ந்த தற்காப்புக் கலை சூப்பர் ஸ்டார் கோனார் மெக்ரிகோர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போட்டி தொடங்கிய 2 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசரவைத்த லியோனல் மெஸ்ஸி

வியாழன் அன்று (ஜூன் 15) பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.

முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்வீன் உடல்நலக்குறைவால் மரணம்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் டிஃபென்டர் கார்டன் மெக்வீன் வியாழன் அன்று (ஜூன் 15) தனது 70வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரிஷப் பந்த் உடற்தகுதி பெறுவார் என பிசிசிஐ நம்பிக்கை

இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

15 Jun 2023

ஆஷஸ் 2023

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான ஆஷஸ் 2023 தொடர் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய தடகள வீரர் கார்த்திக் குமார்

வியாழன் அன்று (ஜூன் 15) புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பில் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் கார்த்திக் குமார் தேசிய சாதனையை முறியடித்தார்.

15 Jun 2023

பிசிசிஐ

முன்னணி ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சர் உரிமைகளைப் பெறுவதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

பிரீமியர் லீக் 2023-24 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 11 அன்று போட்டி தொடங்க உள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைப் போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தி ஆப்கான் வீரர் நிஜாத் மசூத் சாதனை

ஆப்கான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிஜாத் மசூத், வங்கதேசத்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சமீபத்திய தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை : ஒரே பந்துக்கு இரண்டாவது முறையாக ரிவியூ கேட்ட அஸ்வின் ரவிச்சந்திரன்

கிரிக்கெட் ஜாம்பாவான்களில் ஒருவரான அஸ்வின் ரவிச்சந்திரன், டிஎன்பிஎல் 2023 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

துலீப் டிராபியில் பாபா இந்திரஜித்தை புறக்கணித்ததற்கு தினேஷ் கார்த்திக் கண்டனம்

ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் பங்கேற்கும் தென் மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

ஐசிசி புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான விரிவான அட்டவணையை புதன்கிழமை (ஜூன் 14) வெளியிட்டுள்ளது.

உடல்நிலை முன்னேற்றம் குறித்து ரிஷப் பந்த் கொடுத்த புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு டிசம்பரில் விபத்தில் சிக்கிய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அர்ஜுன் டெண்டுல்கரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு வர பிசிசிஐ அழைப்பு

இந்தியாவில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்று வார முகாமிற்கு 20 இளம் ஆல் ரவுண்டர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.

டிஎன்பிஎல் 2023 : ஒரே பந்தில் 18 ரன்களை வாரிக்கொடுத்த அபிஷேக் தன்வார்

டிஎன்பிஎல் 2023 சீசனில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

2025 இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கான இடங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.

14 Jun 2023

ஐசிசி

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்காவிட்டாலும், புதன்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி

பன்டெஸ்லிகா கால்பந்து கிளப் அணியான போருசியா டார்ட்மண்டில் இருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை ஆறு வருட ஒப்பந்தத்தில் ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியுள்ளது.

வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி

கொலம்பியாவில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ் 3இன் போது இந்திய வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி 72-அம்பு பிரிவின் தகுதிச் சுற்றில் 711/720 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.

லியோனல் மெஸ்ஸிக்கு பிஎஸ்ஜி அணியில் மரியாதை கிடைக்கவில்லை என கைலியன் எம்பாபே குற்றச்சாட்டு

கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கைலியன் எம்பாபே பாராட்டினார். ஆனால் அவர் பிரான்சில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு

ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணியிலிருந்து மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல்

ஐபிஎல் 2023 தொடரின்போது காயமடைந்த கே.எல்.ராகுல், இந்திய அணிக்கு ஆசிய கோப்பையின்போது திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான்

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.