இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஃபிரஞ்சு ஓபன் வென்ற இந்த ஜோடி, தற்போது 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசியர்களை வெறும் 41 நிமிடங்களில் தோற்கடித்து ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்குள் முன்னேறியுள்ளது.
ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் பிரணாய் எச்.எஸ். 21-18, 21-16 என்ற கணக்கில் ஜப்பானிய வீரர் கொடை நரோகாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கிடையே கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதியில் சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Sat-Chi enter semis in style, beat WR-1 home-favourite duo in straight games 🤩🔥
— BAI Media (@BAI_Media) June 16, 2023
Well done boys 💪
📸: @badmintonphoto @himantabiswa | @sanjay091968 | @lakhaniarun1 #IndonesiaOpen2023#IndonesiaOpenSuper1000#IndiaontheRise#Badminton pic.twitter.com/HZ91oqOEU3