சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி: செய்தி

சாத்விக்/சிராக் ஜோடிக்கு கேல்ரத்னா, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு

பேட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உட்பட 26 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் நம்பர் 1 இடம் ஒரு வாரம் மட்டுமே நீடித்தது.

ஜப்பான் ஓபன் 2023: பிரணாய் எச்.எஸ்., சாத்விக்/சிராக் காலிறுதியில் தோல்வி, லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை (ஜூலை 28) டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் 2023 சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர்.

ஜப்பான் ஓபன் 2023 : லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (ஜூலை27) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ். மற்றும் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

சாத்விக்-சிராக் ஜோடி உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

கொரியா ஓபனை வென்றதன் மூலம், இந்தியாவின் சிறந்த ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி செவ்வாயன்று (ஜூலை 25) வெளியிடப்பட்ட BWF தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

கொரிய ஓபனில் வெற்றி; 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம் போட்டு கலக்கிய சாத்விக்-சிராக் ஜோடி

இந்தியாவின் முக்கிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி கொரியா ஓபன் 2023 பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை23) வென்றதன் மூலம் இந்த ஆண்டின் மூன்றாவது BWF உலக டூர் பட்டத்தை வென்றனர்.

கொரியா ஓபன் பேட்மிண்டனில் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஃபார்முலா 1 காரை விட அதிக வேகம்! இந்திய பேட்மிண்டன் வீரர் சாத்விக் கின்னஸ் சாதனை

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஷட்டில் கார்க்கை அதிவேகமாக அடித்து (ஸ்மாஷ்) கின்னஸ் சாதனை படைத்து வரலாறு படைத்துள்ளார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 3ம் இடத்திற்கு முன்னேறிய சாத்விக் & சிராக் ஜோடி

செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில், இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்று புது வரலாறு படைத்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியா ஓபன் 2023 இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோவை 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பேட்மிண்டன் ஜோடி பட்டத்தை வென்றது.

இந்தோனேசியா ஓபன் 2023 : இந்தியாவின் பிரணாய் எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தோனேசியா ஓபன் வேர்ல்ட் டூர் சூப்பர் 1000 போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்தியாவின் ஆடவர் பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். இந்தோனேசியா ஓபனின் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு எளிதாக நுழைந்தார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஜோடி!

இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சமீபத்திய இரட்டையர் BWF உலக தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.