இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் பட்டம் வென்று புது வரலாறு படைத்த சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியா ஓபன் 2023 இறுதிப்போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் வூய் யிக் சோவை 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி பேட்மிண்டன் ஜோடி பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்தோனேசியா ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் பெற்றுள்ளனர். மேலும் பிடபிள்யூஎப் சூப்பர் 1000 பட்டத்தை வென்ற முதல் இந்திய ஜோடியும் கூட. சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஜோடி ஏற்கனவே சூப்பர் 100, 300, 500, 750'ஐ வென்றுள்ளதால், அனைத்து பிடபிள்யூஎப் பட்டங்களையும் வென்ற முதல் இந்திய ஜோடியாக புது வரலாறு படைத்துள்ளனர்.