
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஆடவர் பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். இந்தோனேசியா ஓபனின் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு எளிதாக நுழைந்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோரா செனயன் விளையாட்டு வளாகத்தில் 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.
இதையடுத்து புதன்கிழமை (ஜூன் 14) நடைபெறும் இரண்டாவது சுற்றில் ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸை எதிர்கொள்கிறார்.
இதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 12-21, 7-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், எதிரணி வீரர்களான பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் மற்றும் டோமா ஜூனியர் போபோவ் காயத்தால் விலகியதை அடுத்து, அடுத்த சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றனர்.
pv sindu qualifies
மகளிர் பேட்மின்டனில் பிவி சிந்து வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து தொடக்கச் சுற்றில் 21-19, 21-15 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜங்கை வீழ்த்தினார்.
இதையடுத்து சிந்து அடுத்த சுற்றில் நடப்பு சாம்பியனான சீன தைபேயின் டாய் சூ யிங்கை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையில், இந்தியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தொடக்கச் சுற்றில் ஜப்பானின் ரின் இவானாகா மற்றும் கீ நகானிஷிக்கு எதிராக போராடி தோற்றனர்.
இதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜுன்-துருவ் கபிலா ஜோடி மலேசியாவின் ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யீ ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.