அடுத்த செய்திக் கட்டுரை

கொரிய ஓபனில் வெற்றி; 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம் போட்டு கலக்கிய சாத்விக்-சிராக் ஜோடி
எழுதியவர்
Sekar Chinnappan
Jul 24, 2023
06:33 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முக்கிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி கொரியா ஓபன் 2023 பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை23) வென்றதன் மூலம் இந்த ஆண்டின் மூன்றாவது BWF உலக டூர் பட்டத்தை வென்றனர்.
சாத்விக்-சிராக் முதல் நிலை மற்றும் உலக நம்பர் 1 ஜோடியான ஃபஜர் அல்ஃபியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை இறுதிப் போட்டியில் 17-21, 21-13, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினர்.
'பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன்' என்றும் அழைக்கப்படும் இந்த இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்தாலும் வெற்றியுடன் வலுவாக திரும்பி வந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பிரபலமான 'கங்னம் ஸ்டைல்' நடனத்தை ஆடி கொண்டாடினர். இது தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வெற்றிக்கு பிறகு கங்னம் ஸ்டைல் ஆட்டம் போட்ட இந்திய பேட்மிண்டன் ஜோடி
— BAI Media (@BAI_Media) July 23, 2023