Page Loader
சாத்விக்-சிராக் ஜோடி உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
சாத்விக்-சிராக் ஜோடி உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

சாத்விக்-சிராக் ஜோடி உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

கொரியா ஓபனை வென்றதன் மூலம், இந்தியாவின் சிறந்த ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி செவ்வாயன்று (ஜூலை 25) வெளியிடப்பட்ட BWF தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். உலக தரவரிசையில், சாத்விக்-சிராக் ஜோடியின் அதிகபட்ச ரேங்க் இதுவாகும். இதற்கிடையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து 17வது இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், சாய்னா நேவால் ஒரு இடம் சரிந்து 37வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் பிரணாய்.எச்.எஸ். 10வது இடத்தில் உள்ளார். கனடா ஓபன் பட்டத்தை வென்ற லக்‌ஷயா சென், கொரியா ஓபனில் தவறவிட்டதால், 13வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், ஃபார்மில் திணறி வரும் கிடாம்பி ஸ்ரீகாந்த் 20வது இடத்தில் நீடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

சாத்விக்-சிராக் ஜோடி இரண்டாம் இடம்