
சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக காலிறுதியில் டென்மார்க்கின் இரண்டாம் நிலை வீரர்களான கிம் அஸ்ட்ரூப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசென் ஜோடியை அவர்கள் எதிர்கொண்டனர்.
47 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 21-16, 21-19 என்ற நேர் செட் கணக்கில் உலகின் நம்பர் 2 ஜோடியை சாத்விக் மற்றும் சிராக் ஜோடி வீழ்த்தியது.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பிறகு, இருவரும் பங்கேற்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.
அரையிறுதியில் ஜப்பானிய டகுரோ ஹோக்கி மற்றும் யுகோ கோபயாஷி அல்லது கொரியாவின் ஜின் யோங் மற்றும் சியோ சியுங் ஜே ஆகியோரை எதிர்கொள்வார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
சாத்விக்-சிராக் ஜோடி
#ChinaMasters2024: India’s ace duo Chirag Shetty and Satwiksairaj Rankireddy enter the men’s doubles semifinal.
— All India Radio News (@airnewsalerts) November 22, 2024
They defeat the Danish pair of Kim Astrup and Anders Skaarup Rasmussen in the quarterfinal match 21-16, 21-19 in Shenzhen.
Lakshya Sen loses to Denmark’s Anders… pic.twitter.com/KGNY4mAo4x