
ஜப்பான் ஓபன் 2023 : லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ்., சாத்விக் & சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (ஜூலை27) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டனின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லக்ஷ்யா சென், பிரணாய்.எச்.எஸ். மற்றும் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.
லக்ஷ்யா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானிய வீரர் கான்டா சுனேயாமாவை 21-14, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் டென்மார்க் ஜோடியான லாஸ்ஸே மோல்ஹெட் மற்றும் ஜெப்பே பே ஆகியோருக்கு எதிரான போட்டியில் 21-17, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
பின்னர், சக இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொண்ட பிரணாய், 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய பேட்மிண்டன் வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்
Get ready for some epic battles 🤩⚔️
— BAI Media (@BAI_Media) July 27, 2023
📸: @badmintonphoto #JapanOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/k1GxBfuGPU