
ஃபார்முலா 1 காரை விட அதிக வேகம்! இந்திய பேட்மிண்டன் வீரர் சாத்விக் கின்னஸ் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஷட்டில் கார்க்கை அதிவேகமாக அடித்து (ஸ்மாஷ்) கின்னஸ் சாதனை படைத்து வரலாறு படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் மலேஷியாவின் டான் பூன் ஹியோங் மே 2013 இல் மணிக்கு 493 கிமீ வேகத்தில் அடித்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ஜப்பானில் உள்ள சோகாவில் உள்ள யோனெக்ஸ் தொழிற்சாலை ஜிம்னாசியத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சாத்விக்கின் ஸ்மாஷ் வேகம் அளவிடப்பட்டது.
வேக அளவீட்டு முடிவுகளின் அடிப்படையில், மணிக்கு 565 கிமீ வேகத்தில் ஸ்மாஷ் செய்தது உறுதிப்படுத்தப்பட்டு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது ஃபார்முலா 1 காரின் அதிகபட்ச வேகமான மணிக்கு 372.6 கிமீ வேகத்தை விட அதிகமாகும்.
ட்விட்டர் அஞ்சல்
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி கின்னஸ் சாதனை
𝙀𝙫𝙚𝙧𝙮𝙗𝙤𝙙𝙮 𝙞𝙨 𝙖 𝙂𝙖𝙣𝙜𝙨𝙩𝙚𝙧, 𝙏𝙞𝙡𝙡 𝙮𝙤𝙪 𝙨𝙚𝙚 𝙩𝙝𝙚 𝙢𝙤𝙣𝙨𝙩𝙚𝙧 🎶
— BAI Media (@BAI_Media) July 18, 2023
Ps: Previous record was 493 kmph, Satwik surpassed it by 72 kmph 😎#IndiaontheRise#Badminton pic.twitter.com/Vq7nXTLm4G