
கொரியா ஓபன் பேட்மிண்டனில் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 21) காலிறுதியில் ஜப்பானின் டகுரோ ஹோக்கி மற்றும் யுகோ கோபயாஷி ஜோடியை எதிர்கொண்ட சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-14 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு உலக சாம்பியனான சீனாவின் வெய் கெங் லியாங் மற்றும் சாங் வாங் ஜோடியை அரையிறுதியில் சாத்விக் மற்றும் சிராக் ஜோடி எதிர்கொள்கிறது.
முன்னதாக பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முன்கூட்டியே வெளியேறிய பிறகு, பதக்கம் வெல்லும் முனைப்புடன் சாத்விக் மற்றும் சிராக் களத்தில் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
அரையிறுதியில் சாத்விக், சிராக் ஜோடி
All the best for semis champs 🙌🔥
— BAI Media (@BAI_Media) July 21, 2023
📸: @badmintonphoto#KoreaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/WvJtKuFTJP