ஜப்பான் ஓபன் 2023: பிரணாய் எச்.எஸ்., சாத்விக்/சிராக் காலிறுதியில் தோல்வி, லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு தகுதி
வெள்ளிக்கிழமை (ஜூலை 28) டோக்கியோவில் நடந்த ஜப்பான் ஓபன் 2023 சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். காலிறுதியில் நடப்பு சாம்பியன்களான சீன தைபேயின் லீ யாங்-வாங் சி-லின் ஜோடியிடம் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் போராடி 15-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரணாய் எச்.எஸ். காலிறுதியில் விக்டர் ஆக்சல்செனிடம் 21-19, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறினார். இருப்பினும், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வதனாபேவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.