Page Loader
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2023
06:56 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான ஆஷஸ் 2023 தொடர் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது. உலக கோப்பை வெற்றியாளரான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் போட்டி ஜூன் 16 அன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. ஆனால் இந்த போட்டி தொடருக்கு முதலில் ஆஷஸ் என்ற பெயர் வைக்கப்படவில்லை. அப்படியெனில் எப்போது ஆஷஸ் என்ற பெயர் வந்தது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

reason behind ashes

ஆஷஸ் பெயரின் பின்னணி

1877ல் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. இது ஆஷஸ் என்று அழைக்கப்படவில்லை. 1882ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது இங்கிலாந்தை தி ஓவல் மைதானத்தில் தோற்கடித்தது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். தோல்விக்குப் பிறகு, ஒரு ஆங்கில வார இதழ், இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டதாகக் கூறி, "உடல் தகனம் செய்யப்பட்டு ஆஷஸ்(சாம்பல்) ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படும்." என வெளியிட்டது. இந்த பெயர் மக்களின் கவனத்தை ஈர்த்தது. தோல்விக்குப் பிறகு, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஹான் ஐவோ ப்ளிக் தனது அணியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று ஆஷஸை மீண்டும் கொண்டு வர சபதம் செய்தார். அப்போதிருந்து ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட ஆரம்பித்தது.