ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய தடகள வீரர் கார்த்திக் குமார்
வியாழன் அன்று (ஜூன் 15) புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பில் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் கார்த்திக் குமார் தேசிய சாதனையை முறியடித்தார். 10,000 மீட்டர் ஒட்டப்பந்தயத்திற்கான தடகள போட்டியில் கார்த்திக் 29:01.84 நேரத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தகுதி நேரத்தை எட்டி, ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ளார். அவருடன் குல்வீர் சிங், ப்ரீதம் குமார் மற்றும் ஹர்மன் ஜோத் சிங் ஆகியோரும் தடகள கூட்டமைப்பு நிர்ணயித்த இலக்கை எட்டினர். எனினும் இவர்களில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்களை மட்டும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய தடகள கூட்டமைப்பு தேர்ந்தெடுக்கும்.