இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி
பன்டெஸ்லிகா கால்பந்து கிளப் அணியான போருசியா டார்ட்மண்டில் இருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை ஆறு வருட ஒப்பந்தத்தில் ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றியுள்ளது. எனினும் ஜூட் பெல்லிங்ஹாமுக்கான பரிமாற்றக் கட்டணம் மற்றும் பெல்லிங்ஹாமின் ஆண்டு சம்பளம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பெல்லிங்ஹாம் இங்கிலாந்து இண்டர்நேஷனல் பர்மிங்காம் சிட்டியில் இருந்து 2020இல் பன்டெஸ்லிகாவில் சேர்ந்தார் மற்றும் 2021இல் அந்த அணிக்காக ஜெர்மன் கோப்பையை வென்றார். இதற்கிடையே இந்த ஒப்பந்தம் மூலம் இளம் வீரர்களான பெல்லிங்ஹாம், எட்வர்டோ காமவிங்கா, ஆரேலியன் டிச்சௌமெனி, ஃபெடே வால்வெர்டே மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களான டோனி க்ரூஸ் மற்றும் லூகா மோட்ரிக் ஆகியோரைக் கொண்ட வலுவான மிட்பீல்டிங்கை ரியல் மாட்ரிட் பெறுகிறது.