Page Loader
முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்வீன் உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்வீன் உடல்நலக்குறைவால் மரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2023
07:47 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் டிஃபென்டர் கார்டன் மெக்வீன் வியாழன் அன்று (ஜூன் 15) தனது 70வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். மெக்வீன் 1972இல் ஸ்காட்டிஷ் கால்பந்து கிளப்பான செயின்ட் மிர்ரனில் இருந்து லீட்ஸில் சேர்ந்தார் மற்றும் 1974 இல் அவரது அணி இங்கிலாந்து டாப்-ஃப்ளைட் பட்டத்தை வெல்ல உதவினார். மேலும் 1975 ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிக்கு லீட்ஸ் அணி சென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மெக்வீன் 1978இல் லீட்ஸின் கடுமையான போட்டியாளர்களான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு இடம்பெயர்ந்தார். அவர் 1983இல் பிரைட்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் உடன் இணைந்து எப்ஏ கோப்பையை வென்றார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post