டிஎன்பிஎல் 2023 : ஒரே பந்தில் 18 ரன்களை வாரிக்கொடுத்த அபிஷேக் தன்வார்
டிஎன்பிஎல் 2023 சீசனில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பந்துவீச்சாளர் அபிஷேக் தன்வார் இன்னிங்ஸின் கடைசி பந்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய தன்வார் இறுதிப் பந்தை வீச அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து வீசிய இரண்டு பந்துகளும் நோ பாலாக வீசப்பட்ட நிலையில், மேலும் ஒரு வொயிடையும் வீசினார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு 2 ரன்களும் எடுக்கப்பட, மொத்தம் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. டிஎன்பிஎல் வரலாற்றில் ஒரு பந்தில் அதிக ரன் கொடுத்தது இதுதான் எனக் கூறப்படுகிறது.