
ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் வியாழன் அன்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி குரூப் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கள் குழுவில் முதலிடம் பிடித்தது.
இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா 2-7,7-4,3-7,7-5,7-5 என்ற செட் கணக்கில் சடோமி வதனாபேவையும், சவுரவ் கோசல் 7-6,6-7,7-4,3-7,7-5 என்ற செட் கணக்கில் ரியுனோசுகே சுகுவையும் தோற்கடித்தனர்.
தன்வி கன்னா 7-4,7-1,7-1 என்ற கணக்கில் அகாரி மிடோரிகாவாவை வீழ்த்திய நிலையில் அபய் சிங் 6-7,6-7,2-7 என்ற கணக்கில் டொமோடகா எண்டோவிடம் தோல்வியடைந்தார்.
இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
SDAT WSF Squash World Cup Update☑️
— SAI Media (@Media_SAI) June 15, 2023
Team 🇮🇳 wins their final pool match against 🇯🇵 3-1 & will now face 🇲🇾 in the SF.
Take a look at the scores👇
Singh 0-3 Endo
Chinappa 3-2 Watanabe
Ghosal 3-2 Tsukue
Khanna 3-0 Midorikawa
Congratulations & all the very best for the SF team 🇮🇳🥳 pic.twitter.com/GjsJR3oyaE