உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
செய்தி முன்னோட்டம்
உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் இடம் பெறவில்லை.
அஸ்வின் அணியில் இல்லாததுதான் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், அணியில் இடம் பெறாதது குறித்த தனது கருத்தை அஸ்வின் ரவிச்சந்திரன் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த அளித்த பேட்டியில், அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் தனது பங்கும் அதிகம் இருந்ததால், தான் இறுதிப்போட்டியில் விளையாட விரும்பியதாக கூறியுள்ளார்.
ashwin speaks about his foriegn performance
வெளிநாட்டில் சிறப்பாக செயல்படுவதாக கூறிய அஸ்வின்
தனது வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு எப்படி இருக்கிறது என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், 2018-19 சீசனில் இருந்து, வெளிநாட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அஸ்வின் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை என்று கூறினார்.
"மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நினைக்கும் கட்டத்தில் நான் இல்லை என்று நினைக்கிறேன். என் திறமை என்னவென்று எனக்குத் தெரியும். என்னை பற்றி விமர்சனம் சேயும் முதல் சிறந்த விமர்சகனாக நானே இருப்பேன்." என்று அஸ்வின் மேலும் கூறினார்.