
ஜூலையில் வங்கதேசத்திற்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மகளிர் பிரிவுத் தலைவர் ஷஃபியுல் ஆலம் சௌத்ரி நடேல் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் ஜூலை மாதம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளோம்.
அனைத்து போட்டிகளும் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறும்." என்று கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் மகளிருக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த மைதானத்தில் வங்கதேச மகளிர் அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது.
india vs ban women ricket fixture
இந்தியா vs வங்கதேசம் மகளிர் கிரிக்கெட் போட்டி அட்டவணை
ஜூலை 6 ஆம் தேதி டாக்கா செல்லும் இந்திய மகளிர் அணி ஜூலை 9, 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
மேலும் ஜூலை 16, 19 மற்றும் 22 ஆம் தேதிகளில் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. அனைத்து போட்டிகளும் பகல் நேர போட்டிகளாக நடைபெறும்.
இந்திய மகளிர் அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பின்னர் எந்தவித சர்வதேச போட்டியிலும் விளையாடாத நிலையில், ஜூலையில் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளது.