Page Loader
பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Jun 15, 2023
05:19 pm

செய்தி முன்னோட்டம்

பிரீமியர் லீக் 2023-24 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 11 அன்று போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆகஸ்ட் 11 அன்று, நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி பர்ன்லி அணியை எதிர்கொள்கிறது. பிரீமியர் லீக் சீசன் ஆகஸ்ட் 11-13 வார இறுதியில் தொடங்கி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மே 19 2024 அன்று முடிவடையும். இதற்கிடையில், கராபோ கோப்பை இறுதிப் போட்டி பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமையும், யூரோபா லீக் இறுதிப் போட்டி மே 22 அன்று டப்ளினில் நடைபெறும் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஜூன் 1 ஆம் தேதி வெம்ப்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post