
யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து சமீபத்திய தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி, இந்த தொழில்களை நிர்வகிப்பதில் தோனியின் மாமியார் ஷீலா சிங் முக்கிய பங்கு வகிக்கிறார்.
2020 ஆம் ஆண்டு முதல், சாக்ஷி தோனி மற்றும் அவரது தாயார் ஷீலா சிங் ஆகிய இருவரும் தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர்.
இது அவர்களின் வணிக முயற்சிகளை விரிவுபடுத்துவதில் குடும்பத்தின் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.
shiela sing ceo of dhoni company
800 கோடி வணிக சாம்ராஜ்யம்
எம்எஸ் தோனியின் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஷீலா சிங் நிறுவனத்தில் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
ஷீலா சிங் தலைமையில் தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நான்கு ஆண்டுகளில் அதன் நிகர மதிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு ₹800 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாக்ஷி தோனி எம்எஸ் தோனிக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார். அவர் பல்வேறு தொழில்கள் மற்றும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,000 கோடி எனக் கூறப்படுகிறது.
என்டர்டெயின்மென்ட் துறை தவிர தற்போது சாக்ஷி, தோனியுடன் சேர்ந்து, சென்னையில் உள்ள ராஞ்சி ரேஸ் ஹாக்கி கிளப்பின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.