
போட்டி தொடங்கிய 2 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசரவைத்த லியோனல் மெஸ்ஸி
செய்தி முன்னோட்டம்
வியாழன் அன்று (ஜூன் 15) பெய்ஜிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.
2022 டிசம்பரில் உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக சீன கால்பந்து ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் முழுமையாக நிரம்பியது.
மேலும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மெஸ்ஸி அர்ஜென்டினாவை முன்னிலைப்படுத்தி கோல் அடித்ததை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக நூற்றுக்கணக்கான சீன ரசிகர்கள் அர்ஜென்டினா கொடிகளை அசைத்து, மெஸ்ஸி ஜெர்சி அணிந்து அணியினர் தங்கியிருந்த சொகுசு ஹோட்டலுக்கு வெளியே உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தினர்.
இந்நிலையில், 2 நிமிடங்களுக்குள் மெஸ்ஸி கோல் அடித்த வீடியோ கால்பந்து ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
It only took Lionel Messi 80 seconds to score for Argentina against the Socceroos 🐐pic.twitter.com/UA7GlpNF76
— ESPN Australia & NZ (@ESPNAusNZ) June 15, 2023