விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ரோசாரியில் இதே நாளில் (ஜூன் 24) பிறந்தார்.

23 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : மொயீன் அலிக்கு மாற்று வீரராக ரெஹான் அகமதுவை அணியில் இணைத்த இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமதுவை அணியில் இணைத்துள்ளதாக இங்கிலாந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்திருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் 16 வருடங்களை முடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

20 வயது இளைஞனாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 வருடங்களை முடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

தைபே ஓபனில் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி

தைபே ஓபனில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.

ஐரோப்பாவில் இந்திய உணவகத்தை திறந்தார் சுரேஷ் ரெய்னா

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் பிரமாண்டமான இந்திய உணவகத்தை திறந்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது மற்றும் அதன் வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூன் 22) தெரிவித்துள்ளது.

சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடெமியை திறந்தார் "யார்க்கர் புயல்" நடராஜன்

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடங்கியுள்ள புதிய கிரிக்கெட் அகாடெமியை மூத்த விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

விராட் கோலி - கவுதம் காம்பிர் மோதல் : புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டர் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் காம்பிர் இடையேயான மோதல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

சர்வதேச ஒலிம்பிக் தினம் 2023 : பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்

ஆண்டுதோறும் ஜூன் 23 அன்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. இது விளையாட்டு, ஆரோக்கியம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் சுறுசுறுப்பாகவும், ஒன்றாக இணைந்திருப்பதையும் வலியுறுத்துகிறது.

இதே நாளில் அன்று : 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தினம்

1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்கான போட்டி மைதானங்களை மாற்றக்கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரைகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி புரோ லீக்கில் இணைந்தார் பிரான்ஸ் கால்பந்து வீரர் என்'கோலோ காண்டே

பிரான்ஸின் உலகக் கோப்பை வென்ற மிட்ஃபீல்டர் என்'கோலோ காண்டே சவூதி புரோ லீக் சாம்பியன் அல் இத்திஹாட்டில் இணைந்துள்ளார் என்று கால்பந்து கிளப் புதன்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா

தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக பழம்பெரும் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா அறிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன?

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.

எமெர்ஜிங் டி20 கிரிக்கெட் ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் யு-23 அணி

ஹாங்காங்கில் நடந்த மகளிர் எமெர்ஜிங் கிரிக்கெட் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் புதன்கிழமை (ஜூன் 21) வங்கதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், யு-23 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு

செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023க்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

21 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கடைசி நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

20 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

"இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது இப்படித்தான்" : முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பூபிந்தர் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன் என போற்றப்படும் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தொடங்கியபோது, அவரது வாரிசாக விராட் கோலி விரைவில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் உயர்த்தப்பட்டார்.

மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் சதமடித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய யு-19 வீரர் அர்ஷின் குல்கர்னி

இந்திய யு-19 கிரிக்கெட் வீரரான அர்ஷின் குல்கர்னி மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 3ம் இடத்திற்கு முன்னேறிய சாத்விக் & சிராக் ஜோடி

செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்ட சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில், இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட்

உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அனெட் கொன்டவீட், வரும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர்

புவனேஸ்வரில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதலில் 21.77 மீட்டர் தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையை படைத்ததோடு, ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

20 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிநாளை எட்டியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி

ஒடிஷாவில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், யார் இந்த பவானி தேவி?

இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி திங்களன்று (ஜூன் 19), சீனாவின் வுக்ஸியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான சேபர் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார்.

தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 26வது முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் காலியாக இருந்த தலா ஒரு இடத்திற்கான உறுப்பினரை பிசிசிஐ திங்கள்கிழமை (ஜூன் 19) அறிவித்தது.

ஒடிசா ரயில் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கிய இந்திய கால்பந்து அணி

இண்டர்காண்டினென்டல் கோப்பையை வென்றதற்காக ஒடிசா அரசிடம் இருந்து பெற்ற ரூ.1 கோடி பரிசில் ஒரு பகுதியை பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு வழங்க இந்திய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் வூசியில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சி ஏ பவானி தேவி, பெண்களுக்கான சபேர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்

ஆசிய கோப்பை 2023க்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததற்காக பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஃபார்முலா ஒன் : ரெட் புல் அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) கனடாவில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் போட்டியில் வெற்றி பெற்று, தனது 41வது வெற்றியை பதிவு செய்தார்.

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்

புவனேஸ்வரில் நடைபெற்ற ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.