சர்வதேச கிரிக்கெட்டில் 16 வருடங்களை முடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
20 வயது இளைஞனாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 வருடங்களை முடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஜூன் 23, 2007 அன்று, அயர்லாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான அணியில் முதல் முறையாக இவர் அறிமுகமானார். அப்போதிலிருந்து இப்போதுவரை 441 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடி இருக்கிறார். இதுவரை 17,115 ரன்கள்(43 சதங்கள்) அடித்திருக்கும் அவர், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவிப்பதை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகிறார். இந்நிலையில், தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை நினைவுகூரும் வகையில், அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.