Page Loader
ஃபார்முலா ஒன் : ரெட் புல் அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
ரெட் புல் அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஃபார்முலா ஒன் : ரெட் புல் அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2023
04:46 pm

செய்தி முன்னோட்டம்

உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) கனடாவில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் போட்டியில் வெற்றி பெற்று, தனது 41வது வெற்றியை பதிவு செய்தார். 25 வயதான தற்போதைய இரட்டை சாம்பியனும் தொடரின் தலைவருமான அவர், ஆஸ்டன் மார்ட்டின் பெர்னாண்டோ அலோன்சோவை விட 9.570 வினாடிகள் முன்னதாக வந்து வெற்றி பெற்றார். இது இந்த ஆண்டு எட்டு பந்தயங்களில் அவரது ஆறாவது வெற்றியாகும் மற்றும் ஒட்டுமொத்தமாக அவரது 41வது வெற்றியாகும். இதன் மூலம் ஃபார்முலா ஒன் சாதனை புத்தகத்தில் அயர்டன் சென்னின் 41 வெற்றிகளை டிரா செய்தார். மேலும் தனது அணியான ரெட் புல் அணிக்கு 100வது ஃபார்முலா ஒன் பட்டத்தையும் இந்த வெற்றியின் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post