தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை
ஆஷஸ் 2023 தொடரின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 26வது முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து முன்னிலை பெற உதவினார்கள். இங்கிலாந்து அணி படைத்துள்ள இந்த சாதனைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்களில் ஆட்டத்தை டிக்ளேர் செய்த பென் ஸ்டோக்ஸின் முடிவு தைரியமானது என்று அழைக்கப்பட்டாலும், அது கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.