
தைபே ஓபனில் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி
செய்தி முன்னோட்டம்
தைபே ஓபனில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 23) நடந்த காலிறுதி போட்டியில், உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள பிரணாய், 5வது நிலை வீரரான ஹாங்காங்கின் என்ஜி கா லாங் அங்கஸுக்கு எதிராக 19-21, 8-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
பிரணாய் தோல்வியால் தைபே ஓபன் சூப்பர் 300 போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்யா சென் இந்த தொடரில் பங்கேற்காத நிலையிலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா 7 வீரர்களை களமிறக்கியது. இருப்பினும் பிரணாய் மட்டுமே காலிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிரணாய் எச்.எஸ் காலிறுதியில் தோல்வி
End of 🇮🇳’s campaign at #TaipeiOpen2023
— BAI Media (@BAI_Media) June 23, 2023
📸: @badmintonphoto #Badminton pic.twitter.com/bvoHrYCVky