இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்
ஆசிய கோப்பை 2023க்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததற்காக பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வர இந்திய அணி மறுத்ததை கடுமையாக விமர்சித்த மியான்டட், ஆசிய கோப்பைக்கான ஹைப்ரிட் மாடலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகும் விமர்சித்துள்ளார். ஹைபிரிட் மாடலால், குறிப்பாக இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதற்கு மியான்டட் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். "பாகிஸ்தான் 2012 மற்றும் 2016இல் இந்தியாவில் விளையாடி உள்ளது. இப்போது இந்தியர்கள் இங்கு வர வேண்டிய முறை. ஆனால் அவர்கள் வராதபோது நாமும் செல்லக் கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
இணக்கமான உறவை வலியுறுத்தும் ஜாவேத் மியாண்டட்
பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் வலுவாக இருப்பதாக கூறியுள்ள ஜாவேத் மியாண்டட், "தாங்கள் தொடர்ந்து தரமான வீரர்களை உருவாக்கி வருகிறோம். இந்தியா நரகத்துக்குப் போகலாம். நாம் இந்தியாவுக்கு செல்லாவிட்டாலும் அது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது." என்று நம்புவதாக கூறியுள்ளார். இரு நாடுகளிடையே இணக்கமான உறவை வலியுறுத்தும் ஜாவேத் மியாண்டட், "ஒருவரால் அண்டை நாடுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது, எனவே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வது நல்லது என்று நான் எப்போதும் கூறுவேன். கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் நாடுகளுக்கு இடையிலான தவறான புரிதல்களையும் குறைகளையும் நீக்கக்கூடிய ஒரு விளையாட்டு என்று நான் எப்போதும் கூறுவேன்." என்று தெரிவித்துள்ளார்.