Page Loader
இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்
இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்

இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தார் ஒடிசா முதல்வர்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

புவனேஸ்வரில் நடைபெற்ற ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) இரவு, கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி, லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார். "ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பையை அரசின் ஆதரவு இல்லாமல் நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி." என்று அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post