கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்
லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் ரோசாரியில் இதே நாளில் (ஜூன் 24) பிறந்தார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார். 11 வயதில் அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது பெற்றோருக்கு மாதத்திற்கு $900 செலவாகும் அதற்கான சிகிச்சையை கூட வழங்க முடியவில்லை. தனது மிகச்சிறந்த கால்பந்து திறமையால் எஃப்சி பார்சிலோனா அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஸ்பெயினுக்குச் சென்ற பின்னரே சிகிச்சை மேற்கொண்டார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மெஸ்ஸி 2017ல் அன்டோனெல்லா ரோகுஸ்ஸோவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் தியாகோ மெஸ்ஸி, சிரோ மெஸ்ஸி மற்றும் மேடியோ மெஸ்ஸி ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
17 வயதில் ஐரோப்பிய கிளப்புக்காக கோல் அடித்த மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி தனது சுறுசுறுப்பு மற்றும் வேகத்திற்காக 'தி பிளே' என்றும் அழைக்கப்படுகிறார். உலகின் பணக்கார கால்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர். அவரது நிகர மதிப்பு சுமார் $600 மில்லியன் ஆகும். பார்சிலோனாவின் முதல் அணி இயக்குநரான கார்லஸ் ரெக்சாச் அவரது திறமையால் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவர் உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்தார். அந்த நேரத்தில் காகிதம் கிடைக்காததால் ஒப்பந்தம் ஒரு டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டது. 2003 இல் ஆர்சிடி எஸ்பான்யோலுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி தனது பார்சிலோனாவில் அறிமுகமானபோது அவருக்கு 17 மற்றும் அந்த கிளப்பிற்காக கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவரிடம் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாட்டு பாஸ்போர்ட்களையும் வைத்துள்ளார்.