ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
சீனாவின் வூசியில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சி ஏ பவானி தேவி, பெண்களுக்கான சபேர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் 15-10 என்ற புள்ளி கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை வீழ்த்தினார். பவானி தேவி அடுத்து அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவை எதிர்த்துப் போட்டியிட உள்ளார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்ற பவானி தேவி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.