இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் காலியாக இருந்த தலா ஒரு இடத்திற்கான உறுப்பினரை பிசிசிஐ திங்கள்கிழமை (ஜூன் 19) அறிவித்தது.
இதன்படி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவுக்கு ஷ்யாமா டே ஷாவும், ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுவுக்கு விஎஸ் திலக் நாயுடுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, முறையே மகளிர் தேர்வுக் குழு மற்றும் ஜூனியர் கிரிக்கெட் கமிட்டியில் தலா ஒரு தேர்வாளர் பதவிக்கு வந்த விண்ணப்பங்களை பரிசீலித்து ஷ்யாமா டே ஷா மற்றும் விஎஸ் திலக் நாயுடு ஆகியோரை பரிந்துரைத்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளது.
new selectors background
புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பின்னணி
ஆல்ரவுண்டரான ஷ்யாமா டே ஷா, மூன்று டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் 1985 முதல் 1997 வரை பெங்கால் அணிக்காகவும், பின்னர் 1998 முதல் 2002 வரை ரயில்வே அணிக்காகவும் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இரண்டு முறை பெங்கால் அணியின் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையில், விஎஸ் திலக் நாயுடு ஒரு முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் என்றும், அவர் கர்நாடகா மற்றும் தென் மண்டலத்திற்காக துலீப் டிராபி மற்றும் தியோதர் டிராபியில் விளையாடியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.