2025 இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
செய்தி முன்னோட்டம்
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கான இடங்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.
2025 இல் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தில் விளையாட உள்ளது.
இந்தியா கடைசியாக 2007 இல் தான் இங்கிலாந்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், 2025 இல் அந்த சோகத்தை முடிவுக்கு கொண்டு வருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2025 முதல் 2031 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான போட்டி மைதானங்களை அறிவித்துள்ளது.
ecb announces 2025-31 schedule
இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் போட்டி மைதானங்கள்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மற்றும் தி ஓவல், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன், லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மற்றும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் போன்ற புகழ்வாய்ந்த மைதானங்கள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது.
மேலும் இந்தியாவுக்கு எதிரான 2029 தொடருக்கான இடங்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 2029 தொடரில், ஹெடிங்லிக்கு பதிலாக சவுத்தாம்ப்டன் மைதானம் மட்டும் மாற்றப்படுகிறது. மற்ற நான்கு மைதானங்களை மேலே குறிப்பிட்டுள்ளபடி அப்படியே இருக்கும்.
இதே அறிவிப்பில் 2027 மற்றும் 2029 ஆஷஸ் தொடருக்கான மைதானங்களையும் அறிவித்துள்ளது.