
ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை
செய்தி முன்னோட்டம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார்.
இதன் மூலம் மொமினுல் ஹக்கிற்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதல் இன்னிங்ஸில் 175 பந்துகளில் 146 ரன்களை எடுத்தார். இதில் 23 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 151 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரிகளும் இடங்கும்.
Najmul hossain shanto test numbers
நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிவிபரம்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமையை சாண்டோ பெற்றார்.
இதற்கு முன்னதாக மொமினுல் ஹக் இலங்கைக்கு எதிரான 2018 சிட்டகாங் டெஸ்டில் 176 மற்றும் 105 ரன்களை எடுத்து இந்த சாதனையை படைத்த முதல் வங்கதேச வீரர் எனும் சாதனையை படைத்திருந்தார்.
இதற்கிடையில், ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் பெற்ற முதல் பேட்டர் என்ற சாதனையையும் சாண்டோ படைத்துள்ளார்.
இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் சாண்டோவின் நான்காவது சதமாகும்.
தற்போது சாண்டோ 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.83 என்ற சராசரியில் 1,283 ரன்கள் எடுத்துள்ளார்.