
ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் உலகில் மட்டுமல்லாது, சர்வதேச விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் ஒருவர்.
இன்ஸ்டாகிராமில் 253 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனால் இந்திய விளம்பரச் சந்தையில் கோலி மிகவும் பிடித்த முகமாக மாறிவிட்டார்.
இதன் மூலம் தற்போது, அவர் ரூ.1,050 கோடி சொத்து மதிப்புடன், உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரைச் சேர்ந்த வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனமான ஸ்டாக் குரோவிபடி, கோலி உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார்.
virat kohli income sources
விராட் கோலியின் வருமானம்
7 கோடி மதிப்பிலான வருடாந்திர ஒப்பந்தத்தின் 'ஏ+' பிரிவில் விராட் கோலியை பிசிசிஐ சேர்த்துள்ளது. மேலும், ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் சம்பாதிக்கிறார்.
மேலும் ஐபிஎல்லிலும் ஆண்டு வருமானமாக 15 கோடியை பெறுகிறார். தவிர, எஃப்சி கோவா கால்பந்து கிளப், ஒரு டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த சார்பு அணி ஆகியவற்றின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்ற பல ஸ்டார்ட்-அப்களிலும் முதலீடு செய்துள்ளார். விளம்பரத்தில் நடிக்க ரூ.7.5 கோடி முதல் 10 கோடி வரை பெறுவதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவை வெளியிடுவதற்கு முறையே ரூ.8.9 கோடி மற்றும் ரூ.2.5 கோடி வசூலிக்கிறார்.