உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான்
செய்தி முன்னோட்டம்
ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக சில விஷயங்களை கிரிக்கெட் நிபுணர்களை முன்வைத்துள்ளனர்.
அஸ்வின் விளையாடும் லெவனில் சேர்க்கப்படவில்லை
அஸ்வின் ரவிச்சந்திரன் போல எதிரணி பேட்டரை கணிக்கும் வீரர்கள் உலகில் யாரும் இல்லை.
அஸ்வினை சேர்க்காததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், 5 இடது கை வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
ipl behind the loss of india in wtc final
ஐபிஎல் சோர்விலிருந்து வெளிவராத வீரர்கள்
ஐசிசி போட்டிகளில் இந்தியா தோற்கும் போதெல்லாம், ஐபிஎல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகம் கால்பந்தை போல ஃபிரான்சைஸ் லீக்குகளை அடிப்படையாக கொண்ட சூழலுக்கு மாறிவருவதை ஒப்புக்கொண்டாலும், டி20 லீக் முடிந்த உடனே அதற்கு நேரெதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்றதால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமல்லாது ஐபிஎல்லில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூட சரியாக செயல்படவில்லை.
இது தவிர இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங்கின் மோசமான செயல்திறன், சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டியபடி வீரர்கள் சரியான ஷாட்களை தேர்வு செய்து ஆடாதது உள்ளிட்ட பல காரணங்கள் இந்திய அணியின் தோல்விக்கு முன்வைக்கப்படுகின்றன.