உடல்நிலை முன்னேற்றம் குறித்து ரிஷப் பந்த் கொடுத்த புதிய அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி
கடந்த ஆண்டு டிசம்பரில் விபத்தில் சிக்கிய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், விரைவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. 25 வயதான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் இறுதியில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயணித்தபோது பயங்கர கார் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருந்த பந்த், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் எந்தவித உதவியும் இல்லாமல் நன்றாக நடப்பதை பார்க்க முடிகிறது. "மோசமில்லை ரிஷப். எளிய விஷயங்கள் சில சமயங்களில் கடினமாக இருக்கலாம்." என்று அந்த வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.