மனைவிக்காக கடலில் குதித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்குப் பிறகு, ரோஹித் ஷர்மா தனது மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமிராவுடன் நீண்ட விடுமுறையில் சென்றார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடலுக்கு அருகில் இருக்கும் படத்தைப் ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ள நிலையில், அவரது பதிவிற்கு ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரோஹித்தின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், தனது மொபைல் போன் தண்ணீரில் விழுந்தபோது ரோஹித் கடலுக்குள் குதித்து மீட்டுக் கொடுத்ததாக பதிவிட்டது வைரலாகி வருகிறது. இதற்கிடையே படுதோல்வியை சந்தித்த உடனே சுற்றுலாவா என ரசிகர்கள் சிலர் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.