9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா?
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், வியாழக்கிழமை (ஜூன்15), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஆசிய கோப்பை ஹைபிரிட் முறைக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பைக்கு அணிகள் தயாராகும் நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடத்தப்பட உள்ளது. 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கடைசியாக 50 ஓவர் தொடராக நடந்தது. சுவாரஸ்யமாக, விராட் கோலி 2018 ஆசிய கோப்பையில் விளையாடாத காரணத்தால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 50 ஓவர் கிரிக்கெட் முறையில் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்த ஆண்டு விளையாடுகிறார்.
ஒருநாள் கிரிக்கெட் முறையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலியின் புள்ளி விபரம்
விராட் கோலி கடைசியாக 2014 இல் 50 ஓவர் வடிவத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்றார். அந்த தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை. அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக மட்டுமே இந்தியா வெற்றி இலங்கை பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்கும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடந்த ஆசிய கோப்பையில், விராட் கோலி 10 இன்னிங்ஸ்களில் 61.3 என்ற சராசரியில் மொத்தம் 613 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். மேலும் அவரது அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் 183 ஆகும்.