வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி
செய்தி முன்னோட்டம்
கொலம்பியாவில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ் 3இன் போது இந்திய வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி 72-அம்பு பிரிவின் தகுதிச் சுற்றில் 711/720 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.
மேலும் 18 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாதனையையும் முறியடித்தார். அதிதி கோபிசந்த் ஸ்வாமிக்கு முன்னதாக அமெரிக்காவின் லிகோ அர்ரோலா 705/720 என்ற புள்ளிகளை எட்டியதே உலக சாதனையாக இருந்தது.
மேலும் அதிதி கோபிசந்த் ஸ்வாமியின் புள்ளிகள் மூத்தோர் பிரிவில் முதலிடத்தில் உள்ள கொலம்பிய வீரர் சாரா லோபஸின் 713 புள்ளிகளை விட இரண்டு மட்டுமே குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50மீ காம்பவுண்ட் சுற்றுப் பிரிவில் ஆசிய சாதனையையும் அதிதி கோபிசந்த் படைத்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
New World Record 🚨
— SAI Media (@Media_SAI) June 14, 2023
Archery🏹 World Cup Stage 3⃣ Columbia#NCOE @SAI_Sonepat trainee Aditi Gopichand Swamy scripts history by creating a world record of 711/720 points, breaking the previous world record of 705/720. pic.twitter.com/j3Nhhe92aM