Page Loader
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2023
01:14 pm

செய்தி முன்னோட்டம்

2021இல் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து, அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டாலும், அப்போது குறிப்பாக டெஸ்ட் கேப்டன்சிக்கு கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இவர்களுக்கு மத்தியில் வெகு சிலரால் முன்மொழியப்பட்ட ஐந்தாவது பெயரும் ஒன்று உண்டு. அது அஸ்வின் ரவிச்சந்திரன். ஐபிஎல் போன்ற விளையாட்டுகளில் அஸ்வின் ஏற்கனவே கேப்டன்சி அனுபவத்தையும் கொண்டிருந்தார். கேப்டனுக்கான திறன்கள் அவரிடம் இருந்தும், அவர் பெயர் அரிதாக சிலராலேயே பேசப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு கேப்டன்சி வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அஸ்வின் வெளிப்படையாக தற்போது பேசியுள்ளார்.

ashwin speaks about overthinker tag

அதிகம் சிந்திப்பவர் என பெயரெடுத்த அஸ்வின் ரவிச்சந்திரன்

தன்னை அதிகம் சிந்திப்பவர் என கிரிக்கெட் உலகில் உள்ள பெயர் குறித்து பேசிய அஸ்வின், "15-20 போட்டிகளைப் பெறுபவர் மனதளவில் அதிகமாகச் சிந்திக்க வேண்டியதில்லை. அதிகம் சிந்திப்பது மன உளைச்சலுக்கு ஆளாகிவிடும். இது எனக்கும் பொருந்தும். யாராவது என்னிடம் வந்து எனக்கு 15 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படும். சிறப்பாக செயல்பட்டால் தலைமை பதவிக்கும் கவனிக்கப்படுவீர்கள் என சொன்னாலும் அதை குறித்து நான் சிந்தித்து கொண்டிருக்க மாட்டேன்." எனத் தெரிவித்தார். மேலும், யாரோ ஒருவரை அதிகமாகச் சிந்திப்பவர் என்று சொல்வது நியாயமற்றது என்று கூறினார். அத்துடன் தன்னை அவ்வாறு சித்தரித்தது தனக்கு எதிராக வேலை செய்ததா என்று கேட்டபோது, அதை மறுத்ததோடு, தனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை எனத் தெரிவித்தார்.