பயங்கரவாதம்: செய்தி
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்
26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது
தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத செயல்கள் தொடர்பான காட்சிகள் தற்போது பரவி வருகிறது.
நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்
நாளை அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 'நிறுத்தப்போவதாக' மிரட்டும் ஒரு வீடியோவை காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியும், அந்த அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அசாரியின் நெருங்கிய கூட்டாளியுமான மௌலானா ரஹீம் உல்லா தாரிக், பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி அக்ரம் கான் காஜி சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.
நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்
சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனரான பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சர்
பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஹமாஸ் பதுங்கும் இடங்களுக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ஹமாஸ் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு
தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்
இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர்
காசா பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.
வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பராமரிப்பது போன்ற வீடியோவை ஹமாஸ் பயங்கரவாத குழு டெலிகிராம் சேனலில் பரப்பி வருகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை
பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், பாகிஸ்தானின் சியால்கோட்டில் வைத்து இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு
சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?
2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது,
கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(சிசிபி) ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர வலைப்பதிவாளர் ஜெனிபர் ஜெங் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்
தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ்
இஸ்ரேல்: ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்களால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.
போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்
தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது.
அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கடந்த சனிக்கிழமை கராச்சியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பொறியியல் படித்துவிட்டு பயங்கரவாத பயிற்சி அளித்து வந்ததாக தகவல்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் உட்பட 3 பயங்கரவாதிகள் இன்று டெல்லியில் வைத்து பிடிபட்டனர்.
மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்
தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார்.
6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல நாளிதழில் வெளியான செய்தி படி, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், சுமார் 50 தோட்டாக்களால் துளைக்கப்பட்டதாகவும், இந்த கொலை வழக்கில் 6 நபர்கள், 2 பைக்குகளில் வந்ததாகவும், இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV -யில் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனின் வீடுகள் மற்றும் நிலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன?
இந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, இந்திய அரசு ஏஜென்சி கொன்றதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது.
1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்
செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார்.
முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்களாக நடந்து வந்த காஷ்மீர்-அனந்த்நாக் பயங்கரவாத என்கவுண்டர் முடிவுக்கு வந்தது.
இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா மீது கனடா பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவி, முஷால் உசேன் மாலிக், பாகிஸ்தானில் காபந்து அரசில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு
சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவின் தலைவர், அபு அல்-ஹுசைன் அல்-குராஷி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎஃப்), அதிரடி நடவடிக்கை பிரிவான கோப்ரா கமாண்டோ பட்டாலியனை, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.